சிகரெட் புகையைவிட ஆபத்தானதா ஊதுவர்த்தி புகை

 

 வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும். ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

செல்களில் நச்சுத்தன்மை
ஊதுவர்த்தியின் புகையானது செல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது டி.என்.ஏ போன்ற மரபணு மூலக்கூறுகளை மாற்றியமைக்கலாம். இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பொருப்பாகிறது.

சுவாசக்கோளாறை உண்டாக்குகிறது
ஊதுவர்த்தியின் புகை சிலருக்கு இருமல் மற்றும் தும்மலை ஏற்படுத்துகிறது. இது சுவாசப்பாதைகளை நச்சுக்களை உருவாக்குகிறது. இதில் உள்ள நுண்ணிய நச்சுக்கள், மிகவும் ஆபத்தானவை.

நுரையிரல் பாதிப்பு
காற்று மாசுபடுவதினால் நுரையிரலில் எரிச்சல் ஏற்படுகிறது. இது நுரையிரல் புற்றுநோய்க்கான ஆபத்துகளை அதிகரிக்கலாம். மேலும் உடல் நலத்தையும் பாதிக்கிறது.

ஆஸ்துமா அறிகுறிகள்
காற்றை மாசுபடுத்தி, எரிச்சலூட்டுகிறது. ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகளை அதிகரிக்கிறது. இருமல் போன்றவற்றிற்கு காரணமாக உள்ளது.

சரும பிரச்சனைகள்
உங்களுக்கு காற்று மாசுபாட்டினால் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்றவை உண்டாகும் என்றால், ஊதுவர்த்தி புகை உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை இழக்கச்செய்யும். இது சில சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

தள்ளியே இருங்கள்
நீங்கள் கர்ப்பமாக இருந்தால், ஊதுவர்த்தி புகையை விட்டு சற்று தள்ளியே இருங்கள். இந்த புகை உங்களது சுவாசம் வழியாக சென்று கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.

நரம்பியல் பிரச்சனை
ஊதுவர்த்தியின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இதனை நீண்ட நாட்கள் சுவாசித்து கொண்டிருந்தால், நரம்பியல் பிரச்சனைகள் உண்டாகும். கற்றல் திறன் குறைபாடு மற்றும் நினைவாற்றல் குறையும்.

தலைவலி
நீங்கள் மன அமைதிக்காகவும், தெய்வ காரியங்களுக்காகவும் பயன்படுத்தும் இந்த ஊதுவர்த்தி, உங்களுக்கு தலைவலி மற்று தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தலாம்.

"சந்தையில் உள்ள ஊதுவர்த்திகள் ஒரு தீவிர நச்சு புற்றுநோயாகும்" என சுகாதார அமைச்சின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர்.இனோகா சுரவீரா எச்சரித்துள்ளார்..

இலங்கையில் ஊதுவர்த்திகளின் உடல்நல பாதிப்புகள் குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை ஆனால், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இது குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.

ஊதுவர்த்திகளில் பலவிதமான நச்சு இரசாயனங்கள் உள்ளன, அவற்றில் கொந்தளிப்பான கரிம சேர்மங்கள் மற்றும் பொலிஅரோமாடிக் ஹைட்ரோ கார்பன்கள்(volatile organic compounds and polyaromatic hydrocarbons) உள்ளன. பொலிஅரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் புற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் இந்த புகையால் புற்றுநோய், நுரையீரல் நோய், இதய நோய் மற்றும் குறுகிய கால ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகள் கூட ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஊதுவர்த்தியால் மூன்று வகையான பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஊதுவர்த்திகளின் புகை, வெளிப்பாடு நேரம் மற்றும் சுற்றுச்சூழலில் காற்றின் அளவு ஆகியவையே அவையாகும்

நச்சுத்தன்மை பாதிப்பு குறிப்பாக மத இடங்களில் உள்ளவர்களிடமும், குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடமும் ஏற்படும், அவர்கள் கிருமிநாசினி முறைகள் இல்லாததால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வீட்டுக்கும் மத தலங்களுக்கும் இடையே ஊதுவர்த்திகளின் தாக்கத்தில் வேறுபாடு உள்ளது மத தலங்கள். மரியாதைக்குரிய இடங்கள் காற்றோட்டத்தின் பரந்த அளவுக்கு திறந்து விடப்படுகின்றன. இருப்பினும் ஒரு வீட்டில், காற்றோட்டம் குறைவாக இருப்பதால் புகைபிடிப்பது அதிகம்.

மேலும், பாடசாலை வகுப்பறைகள் மற்றும் வாகனங்களில் ஊதுவர்த்திகளை எரியவிடுவது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News

ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?
தற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்
வீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்!
கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்? அவர் பின்னணி என்ன?
Nathan Veeravagu CHIEF FOREIGN CORRESPONDENT, Nathan Veeravagu is an award-winning international correspondent for TMN International, based at the network's South Asia headquarters in Canada.
காஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம் - உச்ச நீதிமன்றத்தால் உடைக்க முடியுமா?